திருப்பரங்குன்றம் கோயிலில் தேர் முகூர்த்தம்
ADDED :1697 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 18 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கான தேர் முகூர்த்தம், தேங்காய் தொடும் முகூர்த்தம் நேற்று நடந்தது.சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்குசுப்பிரமணியம், சண்முசுந்தரம், பேஷ்கார் தேவகி ஆகியோர் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமிக்கு மரியாதை செய்தனர். இதைதொடர்ந்து கோயிலில் கருப்பணசுவாமி முன்பு யாக பூஜை முடிந்து பெரிய வைரத்தேரிலுள்ள விநாயகர், பெருமாள், சிவபெருமான், கருப்பணசுவாமி, தராசு முருகப்பெருமானுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது.