திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கப்பரை விழா
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.மார்ச் 2 காப்பு கட்டுடன் விழா தொடங்கியது.
சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து, பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜை நடந்தது. மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை முடித்து, பூஜாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜைகள் நடத்தினர்.இன்று(மார்ச் 11) சுப்பிரமணிய சுவாமிகோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி,குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார்.
மார்ச் 14 இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்இருந்து பூச்சப்பரம் கொண்டு வரப்பட்டு, அங்காள பரமேஸ்வரிக்கு பூஜைகள் முடிந்து பூ சப்பரத்தில் எழுந்தருளி பாரிவேட்டை நடக்கும். பின் உற்ஸவர் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்றடைவார்.