உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி, அமாவாசை: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

சிவராத்திரி, அமாவாசை: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் குவிய துவங்கினர். இதை முன்னிட்டு நேற்று முதல் மார்ச் 14 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்திருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 7:00 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். மார்ச் 14 மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள் என கோயில் நிர்வாகம் , வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !