செல்லியாண்டியம்மனுக்கு அன்னப்பாவாடை அலங்காரம்
ADDED :1754 days ago
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவிலில், நடப்பாண்டு மாசி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. கடந்த மாதம், 16ல் பூச்சாட்டுதலில் தொடங்கி, கடந்த, 7ல் மஞ்சள் நீராட்டு நடந்தது. இதை தொடர்ந்து பிராமணர் சமூகத்தினர், அன்னப்பாவாடை அணிவிப்புடன், விழா நிறைவுக்கு வரும். இந்த விழா, நேற்று முன்தினம் நடந்தது. அம்மனுக்கு அன்னப்பாவாடை அணிவித்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.