அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி கோயிலில் மகா சிவராத்திரி விழா
ADDED :1713 days ago
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த செட்டியார் காடு கிராமத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நான்குகால பூஜைகள் சிறப்பாக நடந்தது. மஞ்சள் விபூதி திரவிய பொடி அரிசி மாவு பொடி பஞ்சாமிர்தம் பால் தயிர் இளநீர் கலசாபிஷேகம் பன்னீர் தேன் நெய் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் நடந்தது. நான்காவது காலம் முடிந்த உன் சிறப்பு வெள்ளி கவசத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். இவ்விழாவில் ஊர் கிராம வாசிகள் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாக கமிட்டி செய்திருந்தனர். தொடர்புக்கு 9976252733