வெள்ளகோவிலில் 108 சிவலிங்கபூஜை
ADDED :1712 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கார்மேகம் திருமண மண்டபத்தில் 108 சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை, கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு நடந்தது. திருமணமான பெண்கள் வாழை இலையில் சிவலிங்கம் வைத்து வில்வ இலை, பூக்கள், குங்குமம், இவைகளால் பூஜை சகஸ்கரநாம அர்ச்சனை செய்து வழிபட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கும், இந்துக்களின் வழிபாட்டு முறைகள், புனிதம் காக்கவும், இந்த வழிபாடு நடத்தப்படுவதாக தர்ம ரக்ஷ்ண ஸமதியினர் கூறினார்கள்.