மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை உற்சவம்
ADDED :1707 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்தி கரக ஊர்வலமும் நடந்தது.இரண்டாம் நாள் விழாவாக இன்று காலை 11:00 மணிக்கு மயானகொள்ளை நடக்கிறது. இதில் பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. பக்தர்கள் நேர்த்தி கடனாக உணவு பொருட்கள், தானியங்கள் கொள்ளை விடுவர்.நாளை மற்றும் நாளை மறுநாளும் அம்மன் ஊர்வலமும், 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு தீமிதி உற்சவமும், 17 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. வரும் 18ம் தேதி தேர் திருவிழா மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.