சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா
ADDED :1707 days ago
சிவகங்கை : சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 19 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மார்ச் 27 ல் தேரோட்டம் நடக்கஉள்ளது.சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18 ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. மார்ச் 19 ல் காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.திருவிழா நாட்களில் சுவாமி ரிஷப, மயில், யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் இரவில் எழுந்தருள்கிறார். மார்ச் 26 ல் மாலை 5:30 மணிக்குமேல்திருக்கல்யாணம் நடக்கிறது.மார்ச் 27 ல் மாலை 4:00 மணிக்கு தேர் வடம்பிடிக்கின்றனர். மார்ச் 28 ல் தீர்த்தவாரி இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.