வரதராஜப்பெருமாள் கோயிலில் காரடையான் நோன்பு கோலாகலம்
ADDED :1702 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 1ம் தேதி காரடையான் நோன்பு கோலகலமாக நடக்கும். நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
மகாலட்சுமி தாயாருக்கு வாசனை திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. வரதராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், நவக்கிரஹம், கொடிமரம் ஆகியவற்றிற்கு பூஜை நடந்தது. பெண்கள் மகாலட்சுமி தாயார் குறித்து பாடல்கள் பாடினர். மாங்கல்யம், குங்குமம்,பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுள், ஆரோக்கியமும் அதிகரிக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என அர்ச்சகர் கண்ணன் தெரிவித்தார்.