அங்காளம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED :1779 days ago
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இடைப்பாடி அருகே உள்ள கல்வடங்கத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. மஹா சிவராத்திரி மாசித்திருவிழா கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக தினமும் சுவாமி ஊர்வலமும், சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று தொடங்கப்பட்டது. இடைப்பாடி சுற்று வட்டார பகுதிகளில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில், இடைப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பரம்பரை அறங்காவலர்கள் மகிபாலன், வேலுசாமி, அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் கோகிலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.