உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி மாத முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை

பங்குனி மாத முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை

நாமக்கல்: பங்குனி மாத பிறப்பு மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். பங்குனி மாத பிறப்பான நேற்று, முதல் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வந்தது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று காலை, 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.  சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !