கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1690 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தெப்பகுளம் பகுதியில் ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நவநீத பாலகிருஷ்ண சுவாமி கோயில் உள்ளது. நுாறாண்டு பழமை வாய்ந்த இக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்து வழிபாட்டிற்கு உகந்ததாக இல்லாத நிலையில் இருந்தது. கோயில் நிர்வாகம், உபயதாரர்கள் மூலம் கோயில் முற்றிலும் புனரமைக்கப்பட்டது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் புண்யாஹ வாசனம், பகவத் அனுக்ஞை, ரக்சாபந்தன், வேதாபாராயணம், திவ்ய பிரபந்த பாராயணம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.