உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

உத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 வால்பாறை: வால்பாறை, அண்ணாநகர் உத்ரகாளியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை அண்ணாநகர் உத்ரகாளியம்மன், செம்முனீஸ்வரர், கருப்பசுவாமி, மதுரைவீரன் சன்னதி உள்ளது. கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த, 14ம் தேதி பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை, நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர்.விழாவில், நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. காலை, 10:20 மணிக்கு கலச நீரை பக்தர்கள் ஏந்தி கோவிலை வலம் வந்தனர். காலை, 10:30 மணிக்கு, விமான கோபுர கலத்துக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.அதனை தொடர்ந்து, உத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அன்னதான விழாவை, முன்னாள் நகராட்சிதலைவர் கணேசன் துவக்கி வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !