உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்த அய்யனார் கோயில் மாசி களரி விழா

வாழவந்த அய்யனார் கோயில் மாசி களரி விழா

 திருப்புல்லாணி : குதக்கோட்டை அருகே புதுக்கோயில் கிராமத்தில் பூரண புஷ்கலா தேவி சமேத வாழவந்த அய்யனார் கோயில் உள்ளது.முதலாம் ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. கருப்பண்ண சாமிகோயிலின் முன்புறம் ஆட்டுக்கிடா பலியிடப்பட்டது. கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !