சேவகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1685 days ago
காரைக்குடி : கல்லல் அருகே உள்ள கண்டராமணிக்கம் செம்பனுாரில், பூர்ணபுஷ்கலை சமேத சேவகப்பெருமாள் அய்யனார், கருப்பர்சாமி,உடையம்மைத்தாய் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாநடந்தது. மார்ச் 12 ஆம் தேதி அனுக்ஞை, கணபதிஹோமம் மற்றும்மண்டப திறப்பு விழா நடந்தது. மார்ச் 13 ல் விக்னேஸ்வர வழிபாடு,நவக்கிரக ஹோமம், முதல்கால யாக வேள்வி, வேதபாராயணம்நடந்தது.தொடர்ந்து மார்ச் 14 ல் இரண்டாம், மூன்றாம் கால பூஜை,விக்கிரஹ பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்குகும்பாபிஷேகம் நடந்தது. பின்பு, சுவாமிக்குஅலங்காரம், தீபாராதனை நடந்தது.சேவுகப் பெருமாள் அய்யனார்ஆலய தர்மபரிபாலன சங்கம் சார்பில் நடந்த விழாவில், தலைவர்சுப்பிரமணியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர்சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.