உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி விழா செங்கை மாவட்டத்தில் விமரிசை

அனுமன் ஜெயந்தி விழா செங்கை மாவட்டத்தில் விமரிசை

திருப்போரூர்: கேளம்பாக்கம் –- வண்டலுார் சாலையில், பிரசித்தி பெற்ற புதுப்பா க்கம் வீர ஆஞ்சநேயர் மலைக்கோவில் உள்ளது.


இக்கோவிலில் இந்தாண்டு, அனுமன் ஜெயந்தி வைபவம் நேற்று நடைபெற்றது. அதிகாலை படிபூஜையும், காலை 7:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், பால்குட அபிஷேகம் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். இதே போல், நெல்லிக்குப்பம் அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தன. ஆஞ்சநேயருக்கு, 108 வடை மாலையுடன், சிறப்பு தீபாராதனை நடந்தது. செங்காடு கிராமத்தில், சிறப்புபெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அன்னதானம், பக்தர்கள் பிரார்த்தனை வடை மாலை சார்த்தல், ஆஞ்ச நேயர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தல் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. மைலை கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தன. ஆஞ்சநே யருக்கு 108 வடை மாலையுடன், சிறப்பு தீபாராதனை நடந்தது. 


வெண்பேடு கிராமத்தில் உள்ள 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் ஜெய் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறுதாவூர் உ ள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.


அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை -– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடமலைப்புத்துாரில் உள்ள ஜெய ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, ஜெய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படாளம் அருகே உள்ள திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் எதிரே உள்ள வீர அஞ்சநேயர் கோ விலில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், உள் பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே நின்ற கோலத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அதிகாலையில், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது . ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !