குறிஞ்சிப்பாடியில் கிருபானந்த வாரியார் பிறந்தநாள்
ADDED :2 days ago
கடலுார்: குறிஞ்சிப்பாடியில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா நடந்தது.
குறிஞ்சிப்பாடி, சிங்கபுரி விழப்பள்ளம் செங்குந்த மகாஜன சங்கம், செங்குந்தர் இளைஞர்கள் நற்பணி மன்றம் ஆகியன சார்பில் நடந்த விழாவில், சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள கிருபானந்த வாரியார் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கிருபானந்த வாரியார் படம் வீடு வீடாக வழங்கப்பட்டது. சேகர் தலைமை தாங்கினார். சிவஞானம் முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் வசந்தகுமார், செயலாளார் கார்த்திகேயன், பொருளாளர் அருள், ஆலோசகர்கள் சிவமணி, அசோக், விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துராஜ், அருண், விக்கி கிருபா உட்பட பலர் பங்கேற்றனர்.