சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சின்னசேலம்: சின்னசேலம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், 94ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, 108 வடமாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. பஜனை பாடல்களுடன் சுவாமி உட்பிரகார வலம் வந்தது. தொடர்ந்து நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஜெயஸ்ரீ சொற்பொழிவாற்றினார். பின்னர் மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பட்டாச்சாரியர் சுந்தரம் தலைமையில் முரளி சர்மா, ஸ்ரீதர் மற்றும் அந்தணர் குழுவினர் பூஜைகளை செய்தனர். லோகேஷ், சக்திவேல், சரவணபெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.