உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா: ஜன.2ல் உள்ளூர் விடுமுறை

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா: ஜன.2ல் உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 2026 ஜன.,2ல் (வெள்ளிகிழமை) ஒருநாள் மட்டும் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் சுவாமி சிலையில் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடக்கிறது. இந்நாளில் நடராஜரை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 2026 ஜன.,2ல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் பொருட்டு 2026 ஜன.,10 சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன.,10ல் வழக்கம் போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப் படவில்லை என்பதால் ஜன.,2ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !