உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு கன்னியம்மன் கோயில் திருவிழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மூணாறு கன்னியம்மன் கோயில் திருவிழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மூணாறு; மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கிறிஸ்துமஸ் நாளில் நடக்கும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று திருவிழா நடக்கவில்லை. ஜன.26ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திருவிழா நடந்தது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்தும், முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !