உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கொடியேற்றம்

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கொடியேற்றம்

சிவகங்கை: சிவகங்கை நேருபஜார் குண்டூரணி கரையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் மண்டல பூஜை துவங்கியது. காலை 10:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சங்கல்பம், விநாயகர் பூஜை நடந்தது. டிச., 26 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு விசேஷ பூஜை, கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். டிச., 27 ல் மண்டல பூஜை, மகா அபிேஷகம் நடக்கும். அன்று மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா வருவார். முளைப்பாரி உற்சவம், பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்துவர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !