உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூன் 13ல் ஐயப்பா ஆஸ்ரமம் மஹா கும்பாபிஷேக விழா!

ஜூன் 13ல் ஐயப்பா ஆஸ்ரமம் மஹா கும்பாபிஷேக விழா!

சேலம்: "சேலத்தில் உள்ள ஐயப்பா ஆஸ்ரம மஹா கும்பாபிஷேக விழா, வரும் 13ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு அருள் பெற்றிட வேண்டும் என, ஸ்ரீ ஐயப்பா டிரஸ்ட் தலைவர் நடராஜன், செயலாளர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளனர்.சேலம், ஸ்ரீ ஐயப்பா டிரஸ்ட் தலைவர் நடராஜன், செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் கூறியதாவது: சேலம், சாஸ்தா நகரில் ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமத்தில் குடிகொண்டு இருக்கும் ஐயப்ப சுவாமிக்கு ஆலய தந்திரி கேரளா பட்டாம்பி தந்திர ரத்தினம் அழகத்து சாஸ்திர சர்மன் நம்பூதிரிபாட் தலைமையில் ஆயிரத்து எட்டு கலச பூஜை நடத்தி, மஹா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி காலை 7 மணி முதல் காலை 7. 30 மணிக்குள் ஐயப்பன், கணபதி, முருகன், பகவதி மற்றும் உபதேவதைகளுக்கு அஷ்டபந்தன சகஸ்ரகலச மஹா கும்பாபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகம் அன்று நடக்கும் ஆயிரத்து எட்டு கலசபூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசியுடன், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கலச பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததும் கலசம், கும்பாபிஷேக பிரசாதம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 8ம் தேதி கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 9ம் தேதி பக்தி இன்னிசை கச்சேரி, 10ம் தேதி உன்னிமேனன் குழுவின் ஐயப்ப பக்தி கானமேளா, 11ம் தேதி மஹதி குழுவின் கர்நாடக பக்தி இன்னிசை கச்சேரி, 12ம் தேதி திரைப்பட பாடகர் முகேஷ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி, 13ம் தேதி திரைப்பட பாடகர் மதுபாலாகிருஷ்ணன் குழுவினர் ஐயப்ப பக்தி கானமேளா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழா துவங்குவதை முன்னிட்டு, ஐயப்பா ஆஸ்ரமத்தில் முகூர்த்தகால் நடும் விழா நடந்து முடிந்துள்ளது. விழாவ முன்னிட்டு தினமும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான ஆறு நாள் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொண்டு, ஐயப்பனை வழிபட்டு அருள் பெற்றிட வேண்டும். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்திலும், அன்னதானத்திலும் தவறாமல் கலந்து கொண்டு, தங்களால் இயன்ற பொருள், நிதி உதவி வழங்கி, ஐயப்பன் சுவாமி அருளுக்கு பாத்திரமாக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஐயப்பா ஆஸ்ரம டிரஸ்ட் உபதலைவர் மனோகரன், இணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !