உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் குற்றால ரோடு முப்பிடாதி அம்பாள் கோயில் கொடை விழா!

நெல்லை டவுன் குற்றால ரோடு முப்பிடாதி அம்பாள் கோயில் கொடை விழா!

திருநெல்வேலி: நெல்லை டவுன் குற்றால ரோடு முப்பிடாதி என்ற திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் கொடை விழா நடந்தது. நெல்லை டவுன் குற்றால ரோடு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி என்ற திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கொடை விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொடை விழா கடந்த 29ம் தேதி துவங்கியது.அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கால்நாட்டு வைபவம் நடந்தது. கொடை விழா நாட்களில் தினமும் இரவு உபயதாரர்களால் சிறப்பு பூஜை நடந்தது. 3ம் தேதி மாலை 6 மணிக்கு சூரை விழா, இரவு 9 மணிக்கு மாக்காப்பு வழிபாடு நடந்தது. 4ம் தேதி இரவு 10 மணிக்கு குடியழைப்பு நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் வீதியுலா, 11 மணிக்கு கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு மதிய கொடை விழா, மாலை 4 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், 6 மணிக்கு பொங்கல் விடுதல், இரவு 8 மணிக்கு அக்னி சட்டி வீதியுலா, 11 மணிக்கு வெங்கல அக்னி சட்டி எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, சாமக்கொடை நடந்தது. இன்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு பூஜை, 9 மணிக்கு சன் இளைஞர் குழு சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை இரவில் சிறப்பு பூஜை நடக்கிறது.12ம் தேதி இரவு எட்டாம் நாள் பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை நெல்லை டவுன் குற்றால ரோடு முப்பிடாதி என்ற திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் கொடை விழாக்குழுவினர், சேனைத் தலைவர் சமுதாயத்தினர் மற்றும் இளைஏர் அணியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !