ராஜகோபுரத்தில் பைரவர்
ADDED :1871 days ago
தனது தவத்தை கலைத்த மன்மதனை அழித்தார் சிவன். கலக்கம் அடைந்த மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானைச் சரணடையவே, அவளது கண்களுக்கு மட்டும் கணவர் தெரிவார் விமோசனம் கொடுத்தார். காமன் என்னும் மன்மதனை உயிர்ப்பித்ததால் காமநாதீஸ்வரர் என்று பெயர் பெற்றார் சிவபெருமான். இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் உள்ளது. இங்கு அஷ்ட (எட்டு) பைரவர் சன்னதி இருப்பது சிறப்பு. இவர்களில் அசிதாங்க பைரவர் சூரியனுடனும், சண்டபைரவர் சந்திரனுடனும், பீஷண பைரவர் பீட வடிவிலும் உள்ளனர். கபால பைரவர் ராஜகோபுர உச்சியில் இருக்கிறார்.