அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா ரத்து
ADDED :1678 days ago
அந்தியூர்: அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா, பங்குனி மாதத்தில் விமரிசையாக நடப்பது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு பண்டிகை நடக்கவில்லை. நடப்பாண்டு ஏப்ல் பண்டிகை வருகிறது. இது தொடர்பாக, கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், பண்டிகையை நடத்துவது குறித்து ஆலோசிக்குமாறு, ஆர்.டி.ஓ., கேட்டுக் கொண்டார். இதையடுத்து நடப்பாண்டும் ரத்து செய்வதாக, கோவில் செயல் அலுவலர் சரவணன், நேற்று அறிவித்தார்.