புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர்த்திருவிழா
ADDED :1764 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியில் தேர்த்திருவிழா நடந்தது.
புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 43ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றிரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று, வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, இன்றுமயான கொள்ளை நிகழ்ச்சி யில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.