சிருங்கேரி பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் கரூர் வருகை
கரூர்: சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் இன்று (6ம் தேதி) கரூர் வருகிறார். வரும் 8 ம் தேதி வரை கரூர் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்வாமி பங்கேற்கிறார். கரூர் பசுபதீஸ்வரா கோவில் முன்பு இன்று மாலை 6 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு, கரூர் சாரதா பீடம் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு கரூர் அரவிந்த் டிரேடர் வணிக வளாகத்தில் ஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணமும், 8 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமிகள் நெரூர் ஸ்ரீ பிரமேந்திராள் அதிஷ்டானம் செல்கிறார். மாலை 5 மணிக்கு பக்த மஹா ஜனங்களுக்கு தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 8 ம் தேதி காலை சிறப்பு பூஜை, மதியம் 12.30 மணிக்கு தீர்த்த பிரசாதம், மாலை 5 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமி கிருஷ்ணராயபுரம் புறப்பட்டு செல்கிறார். ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ ராஜ ராஜஸ்வரி ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.