முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழா!
தர்மபுரி: தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழா சிறப்பாக நடந்தது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மயில் வாகனத்தில் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணய ஸ்வாமி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய ஸ்வாமி கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா நடந்தது.
* காரிமங்கலம் ஸ்ரீ அருணேஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், மொரசுப்பட்டி முருகன் கோவில், சென்னம்பட்டி முருகன்கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.