உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

சக்திமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

சிவகாசி: திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட சக்திமாரியம்மன் கோயில், சிங்கார விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. விநாயகர் பூஜையுடன் துவங்கிய வருஷாபிஷேக நிகழ்ச்சியில் 108 சங்கு பூஜை, சங்காபிஷேகம், புஷ்பாஞ்சலி சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. உறவின்முறை தலைவர் பாக்கியம், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் முத்துக்குமார், பள்ளி தாளாளர் பஞ்சு ராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !