குரு பகவான் கோயில் நடை திறப்பு மாற்றம்!
ADDED :4868 days ago
குருவித்துறை: குருவித்துறை சுயம்பு குருபகவான் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டது. குருவித்துறை சித்திர ரத வல்லபெருமாள் கோயிலில் முன் சுயம்பு குருபகவானுக்கு தனி கோயில் உள்ளது. தவக்கோலத்தில் எழுந்தருளிய குருபகவானை பக்தர்கள் தரிசிக்க வியாழன் உகந்தநாள். தற்போது பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பரிகாரபூஜைக்காக கோயில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டது. தினமும் காலை 8.30 முதல் பகல் 12 மணி, பகல் 3.30 முதல் 5.30 மணி வரையிலும், வியாழன் மட்டும் காலை 8 முதல் பகல் 1.30மணி, பகல் 3 முதல் மாலை 6 மணி வரை நடை திறந்திருக்கும். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், ஊழியர் வெங்கடேஷன் செய்தனர்.