ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிபட்டம் மாடவீதிகள், ரதவீதிகளில் சுற்றி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரத்துக்கு வாசுதேவபட்டர் தலைமையில் பூஜைகள் செய்யப் பட்டது. மங்கல வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றபட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதிஉலா நடக்கிறது. 9ம் நாளான பங்குனி உத்திரத்தில் காலை 7:20 மணிக்கு செப்புத்தேரோட்டம், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 1ந்தேதி மாலை 6:00 மணிக்கு குறடு மண்டபத்தில் நடக்கும் புஷ்பயாகத்துடன் திருக்கல்யாணம் நிறைவு பெறுகிறது. நேற்றைய விழாவில் சடகோபராமானுஜ ஜீயர், வேதபிரான் சுதர்சன், அரையர் முகுந்தன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.