உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகாண்டியம்மன் கோவில் விழா; பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பெரியகாண்டியம்மன் கோவில் விழா; பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

குளித்தலை: செங்குளம் பெரியகாண்டியம்மன், மகாமுனி, பொன்னர் சங்கர் கோவிலில் மூன்றாம் ஆண்டு திருவிழா நடந்தது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., செங்குளம் வடபாகத்தில்  பெரியகாண்டியம்மன், மகாமுனி பொன்னர் சங்கர் ஆகிய கோவில்கள் உள்ளன. மூன்றாம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை, குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம்,  தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கை நடைபெற்றது.  இன்று காலை, பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு பொன்னர் சங்கர் நாடகம்; நாளை காலை, பொங்கல் வைத்தல் கிடா வெட்டுதல், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை, பஞ்., தலைவர் பிச்சை பாப்பாத்தி, குடிப்பாட்டுகாரர்கள் விஜயகுமார், முருகேசன் உள்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !