ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :1695 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி சஷ்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டிகவசம் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.