சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம்!
ADDED :4866 days ago
செஞ்சி : செஞ்சி தாலுகா வாணியர் வைசியர் சங்கத்தினர் சிங்கவரம் ரங்கநாதருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடத்தினர். செஞ்சி தாலுகா வாணியர், வைசியர் சங்கத்தினர் வைசாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம் நடத்தினர். இதை முன்னிட்டு தாயாரம்மாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.இரவு ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் கருட வாகனத்தில் எழுந்தருளி செஞ்சி மற்றும் சிங்கவரத்தில் சாமி வீதியுலா நடந்தது. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.விழா ஏற்பாடுகளை செஞ்சி தாலுகா வாணியர் வைசியர் சங்கத்தினர் செய்திருந்தனர். இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பாகவத கோஷ்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.