உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா

காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் ரதம், பல்லாக்கு வீதி உலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) 198ம் ஆண்டு கந்தூரி விழா துவங்கியது. பகல் 4.30 மணிக்கு இரதம் பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. முன்னதாக பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம். பல்லக்குகள் பள்ளிவாசல் வழியாக லெமர்விதி. பாரதியார்சாலை, திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் ஏப்.1ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை விதி உலா இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். அதிகாலை 3மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல். ஏப்.4ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. கந்தூரி விழா ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் சிறப்பாக செய்து வருகின்றனர். பல்லாக்கு ரதம் புறப்பாடில் இஸ்லாமிய மக்கள் பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !