ஆண்களை தடியால் அடித்து பெண்கள் மகிழும் விழா
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டாலும் உ.பி.,மாநிலம் மதுராவில் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஹோலி பண்டிகையை ஒரு வாரகாலத்திற்கு கொண்டாடுவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக கொண்டாடுவர். அதில் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டும் ‛லாத்மர் ஹோலியும் ஒன்றாகும். இந்த பண்டிகை ராதா-கிருஷ்ணரின் புராணக்கதையை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் ராதா இருக்குமிடமான பிருந்தாவனத்திற்கு வருகிறார், அங்கு ராதா தன் தோழியருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்,இவர்கள் விளயைாட்டில் வேடிக்கையாக உள்ளே நுழைந்து குறும்பு செய்கின்றனர் கிருஷ்ணனும் அவரது நண்பர்களும். இதனால் பொய்க்கோபம் கொண்ட ராதாவும் அவரது தோழியர்களும் சேர்ந்து கையில் கிடைத்த தடியை எடுத்து செல்லமாக அடித்து விரட்டிவிட்டு பின் கொண்டாட்டங்களை தொடர்கின்றனர்.
இந்தக் கதையை அடிப்டையாக வைத்து பல நுாறு வருடங்களாக மதுராவில் நடந்துவருவது தான் ‛லாத்மார் ஹோலி பண்டிகை.கோவிட் எச்சரிக்கையையும் தாண்டி ஏாராளமானபேர் இந்த விழாவில் கலந்து கொண்டவனர்.பெண்கள் கோபிகையர் போல வேடமணிந்து கைகளில் தடி ஏந்தி வந்தனர் ஆண்களும் அதே போல புராணத்தில் சொல்லியபடி வேடமணிந்து கைகளில் கேடயம் போல ஒரு தடுப்புடன் வந்தனர்.அப்படி வந்தவர்களை பெண்கள் தடியால் அடி்ததனர் அத்தனை அடிகளையும் ‛தடுப்பில் வாங்கிக் கொண்ட ஆண்கள் பின் பின்வாங்கி ஒடினர். இதன் பின் பெண்கள் கையில் உள்ள தடியை கிழே போட்டுவிட்டு மேலும் வண்ணங்களை எடுத்து தோழியர்கள் மீது பூசியபடி மிகுந்த ஆனந்தத்துடன் பாட்டுப்பாடி நடமாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்வை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். -எல்.முருகராஜ்.