உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் சீனிவாச கல்யாணம் கோலாகலம்

திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் சீனிவாச கல்யாணம் கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லையை அடுத்த திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் சீனிவாச திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.தென் திருப்பதி என அழைக்கப்படும் மேலத் திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் சீனிவாச திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆடிட்டர்கள் ராமகிருஷ்ணன், முத்து மற்றும் முருகானந்தம், கண்ணன் உட்பட ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கல்கத்தா சீனிவாசன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !