உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி

விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர்த்திருவிழா வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. தேர் திருவிழா கொடியேற்றம் 24ம் தேதி காலை 7.47 முதல் 8.17 மணி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு விநாயகர் திருவிழாவான நேற்று காலை நெல்லையப்பர் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரும் 23ம் தேதி வரை காலை, மாலையில் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் உள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 11ம் தேதி முதல் மூவர் விழாவும், 17ம் தேதி சந்திசேகர திருவிழாவும் நடக்கிறது. அன்று முதல் சந்திரசேகர், பவானி அம்பாள், விநாயகர் நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !