திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்
ADDED :4865 days ago
பாபநாசம்: பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள பாலைவனநாதர் உடனுறை தவளவெண்ணகை கோவிலில் அமைந்துள்ள திருஞான சம்பந்தர் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு திருக்கல்யான வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பூர்ணாம்பிகா சமேத திருஞான சம்பந்தரின் திருவருள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பாரத் ஐ.டி.ஐ., மேலாளர் கிருஷ்ணஸ்வாமி, அசோக், சிவமூர்த்தி, சுகுனாபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதிடர் முருகேசன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.