உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு

கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது. மார்ச் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி, கந்தூரி விழா நடந்தது. மார்ச் 23 ம் தேதி இரவு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதையொட்டி திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இந்து-முஸ்லிம் பக்தர்கள் மல்லிகைப்பூ கொடுத்தும், சர்க்கரை பார்த்தியா ஓதியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரிசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஒன்று சேர்ந்து சந்தன தேர் அலங்காரம் செய்தனர். அதிகாலை 3:00 மணிக்கு பழைய பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 6:00 மணிக்கு தர்காவை வந்தடைந்தது. அனைவருக்கும் சந்தனம், இனிப்பு வினியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்து, முஸ்லிம் பக்தர்கள் பங்கேற்றனர். துவரங்குறிச்சி, பொன்னமராவதி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருப்புத்தூர் போலீஸ் டி.எஸ்.பி., பொன் ரகு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !