கொண்டத்துக் காளியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றம்
அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, இரவு 8 : 00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 10 : 00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதியில் கிராம சாந்தி நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜையை தோடர்ந்து 11 : 00 மணிக்கு விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் சப்பரத்தில் திரு வீதி உலா வருதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், கோவில் குருக்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று 25 தேதி காலை 7:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, திரு வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.