சாத்தாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1679 days ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி மாலை திருவிளக்கு வழிபாடு நடந்தது. இக்கோயிலில் மார்ச் 22 ல் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 4 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் 5:30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பரமக்குடியில் ராமகிருஷ்ணா மகளிர் பஜனைக் கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடினார். இரவு உற்சவர் சாத்தாயி அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு மேளதாளத்துடன் வீதி வலம் வந்தார். மூலவர் மஞ்சள் பட்டு உடுத்தி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.