திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
ADDED :1824 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6 ம் திருவிழாவை முன்னிட்டு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர். நேற்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், ஆவுடை நாயகி, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞான சம்பந்தர் 16கால் மண்டபம் முன் எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டது. தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.