பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திர தேரோட்டம்
ADDED :1679 days ago
பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரதேர்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
இக்கோயில் பங்குனி உத்திரதேர்திருவிழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் உற்சவமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிேஷக, ஆராதனை நடக்கிறது.6ம் நாள் திருவிழாவில் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவாக பி.சி.சிதம்பரசூரியவேலு மண்டகப்படி, கணக்கு வேலாயி அம்மாள் மண்டபத்தில் நடந்தது. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.முக்கிய திருவிழாவான தேரோட்டம் நாளை (மார்ச் 27) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ரதவீதிகளை தேர்சுற்றிவரும். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம், மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.