உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

 திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

இங்கு கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9:45 மணிக்கு அம்மன் சார்பாக சுப்ரமணிய பட்டரும், சுவாமி சார்பாக ராஜா பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். காலை 10:15 மணிக்கு திருக்கல்யாணம் நடந்து. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டம் இன்று காலை 8.20 மணிக்கு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !