உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை பங்குனி உத்திரம் பழநிக்கு பாத யாத்திரை

நாளை பங்குனி உத்திரம் பழநிக்கு பாத யாத்திரை

கோவை:நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.பங்குனி மாதம் பவுர்ணமி தினமும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் பங்குனி உத்திரமாக அனுசரிக்கப்படுகிறது. இது முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில், முருகனின் அறுபடை வீடுகளில், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பக்தர்கள் பழனிக்கு, காவடி சுமந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். கோவையின் சுற்றுப்பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இரவில்தான் பயணிக்கின்றனர். கோவை-பொள்ளாச்சி சாலை வழியாக, இரவில் செல்லும் பக்தர்களிடம், ஒளிரும் பட்டைகளை அணிந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அல்லது, கையில் டார்ச் போன்ற சிறு விளக்குகளை எரிய விட்டுச் சென்றால், விபத்துகளை தவிர்க்கலாம் எனவும், ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !