பரமக்குடி முத்தாலம்மன், முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன், முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.
பரமக்குடி தரைப்பாலம் அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில்பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
* எமனேஸ்வரம் ஜீவாநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூக்குழி விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், வேல் குத்தியும் வலம் வந்தனர். மதியம் 2:00 மணிக்கு கோயில் முன் பூக்குழியில் இறங்கி ஆண், பெண் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.
* பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனி விழாவையொட்டி, நேற்று காலை மற்றும் மாலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் தீப தேரில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு தீபாராதனைகளுக்குபின் தேர் ஆடி அசைந்து நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சக்தி கோஷம் முழங்க அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.