உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிவேல் குன்றத்தில் பங்குனி உத்திர திருவிழா

வெற்றிவேல் குன்றத்தில் பங்குனி உத்திர திருவிழா

 கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றத்தில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலில்,பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சக்திவேல் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சக்திவேல் ஊர்வலம் நடந்தது. பின்னர் காவடி அபிஷேகம், மஞ்சள் இடித்தல், மழுவு அடித்தல், மிளகாய் அபிஷேகம் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து தீபாராதனை, வேல் அணியும் நிகழ்ச்சியும் காவடி மற்றும் பூந்தேர்கள் ஊர்வலம் நடைபெற்றன. இரவு சக்திவேல் முருகன் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !