உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் முத்துபல்லக்கு

மயிலம் முருகன் கோவிலில் முத்துபல்லக்கு

 மயிலம் : மயிலம் முருகன் கோவில் முத்துபல்லக்கு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் கடந்த 19ம் தேதி பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. கடந்த 27ம் ம் தேதி தேர் திருவிழா நடந்தது. 28ம் தேதி இரவு மயிலம் மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதனை தொடர்ந்து 29ம் தேதி முத்துப்பல்லக்கு விழாவில் இரவு 9:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. பின் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 11:30 மணிக்கு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட முத்துபல்லக்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி மலைவலக் காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !