கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் துவங்கியது
அவிநாசி: அவிநாசி அருகே உள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் துவங்கியது. பிரசித்தி பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
கடந்தாண்டு கொரோனா பொது முடக்கத்தால், தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு தேர் திருவிழா, கடந்த, 27ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 6:00 மணிக்கு, மாரியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளினார். மாலை, 5:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு. ஒரு நிலையில் நிறுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மீண்டும் நாளை மதியம் 3:09 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் ஒரு நிலையில் நிறுத்தப்படும். வரும், 2ம் தேதி தேரோட்டம் கோவிலை வந்தடையும். 3ம் தேதி தெப்ப உற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகன காட்சி ஆகியவை நடைபெறுகிறது.வரும், 4ம் தேதி அம்மன் தரிசனம், மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. 5ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.